விஜய் உடனே பயணித்துவிட்டு  அவதூறாக பேசும் சினிமா கலைஞர்கள்

விஜய் உடனே பயணித்துவிட்டு அவதூறாக பேசும் சினிமா கலைஞர்கள்

தமிழ் சினிமாவில், ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்த உடனேயே, அதுவரை அவரைப் புகழ்ந்து கொண்டிருந்த அவரின் ரசிகர்கள் என சொல்லிக் கொண்டிருந்த சக நடிகர்கள், சினிமா கலைஞர்கள் சிலரை கொஞ்சம்  காண்டாக்கி விடுகின்றன என நினைக்கத் தோன்றுகிறது.

நடிகராக அவர் இருந்தது வரை பிரச்சனை இல்லை எப்போது அரசியல்வாதியாக மாறுகிறாரோ அந்த நேரத்தில் பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது.ஏனென்றால் ஒவ்வொரு நடிகரும் ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கின்றார்கள்.. உதாரணமாக விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன் அவருக்கு நிறைய சினிமா பீல்டில் இருந்தவர்கள்  ஆதரவு இருந்தது. விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிர்ந்து பேச மாட்டார் அமைதியானவர் நல்ல நடிகர் என நிறைய பேர் விஜயை பாராட்டியே பேசுவர்.

இயக்குனர் வெற்றிமாறன் கூட ஒரு படத்திற்கு கதை சொல்ல சென்றதாக கூட கூறப்பட்டது. வெற்றிமாறனின் படத்தில் விஜய் நடிப்பார் என கூட கூறப்பட்டது, அதுபோல சீமான் அவர்கள் இயக்கத்தில் பகலவன் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூட கூறப்பட்டது. இதெல்லாம் பிற்காலத்தில் நடைபெறவில்லை என்றாலும், விஜய் அரசியலுக்கு வந்தவுடன் குறிப்பாக கரூர் சம்பவம் நடந்த பிறகு சினிமா சம்பந்தப்பட்ட நபர்களே விஜய் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதில் வெற்றிமாறன்,சத்யராஜ், கமலஹாசனின் மகள் சுருதிஹாசன், சத்யராஜின் மகள் திவ்யா, சீமான் என சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் அதிகமாக விஜயை விமர்சித்து வருகின்றனர் இதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியான காரணங்கள் மட்டுமே ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒரு கட்சியைச் சார்ந்த நடிகர்கள்.

அதிலும் சத்யராஜ்,விஜய் நடித்த தலைவா படத்தில் நடித்துள்ளார் அதற்கு முன்பே அவரின் தந்தை எஸ் ஏ சி இயக்கிய நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.விஜயுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.இருப்பினும் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன், கரூர் சம்பவம் நடந்தவுடன்  விஜயை விமர்சித்துவிட்டு ச் சை என ஒரு வார்த்தையும் அவர் குறிப்பிட்டு பேசினார். இப்படி விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் விஜய்யை எதிர்க்கும் பொது மக்களை விட தனது சக துறையிலேயே பலரால் எதிர்க்கப்பட்டு வருகிறார் விஜய். ஆனால் இந்த சகத்துறையில் விஜய் எதிர்ப்பவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு கட்சி சார்ந்து இயங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோலத்தான் சில சினிமாவைச் சேர்ந்த நபர்கள்  விஜயகாந்தையும் கட்சி ஆரம்பித்த சமயத்தில் விமர்சித்தனர். அவர் இறந்த பிறகு அவர் போல முடியாது என கூறினர். அதுபோலத்தான் பலர் கபட நாடக வேசதாரிகளாக சினிமா உலகில் உள்ளனர்.