சிம்பு நடிப்பில் மிஷ்கின் இயக்க உள்ளதாக சொல்லப்படும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சிம்பு இப்போது மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து அவர் சேரன் அல்லது மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் எதுவும் உறுதிப்படுத்தப் படாத நிலையில் இப்போது மிஷ்கின் படத்தில் வடிவேலு ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
வடிவேலு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் ஏற்பட்ட நஷ்டத்துக்காக அவர் மேல் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலு இப்போது மிஷ்கின் படத்தில் நடிக்க இருப்பதாக உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவுடன் வடிவேலு கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான கோவில் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கூட்டணி உருவாகி இணைந்து இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.











