தமிழ் சினிமாவில் ஏபி நாகராஜன் காலத்தில் இருந்து எண்ணற்ற படங்கள் பக்திபடங்களாக வந்துள்ளன, பிறகு வந்த ராம நாராயணன், இறையருள் இயக்குனர் சங்கர் வரை பல்வேறுவிதமான பக்திப்பட இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளார்கள், இவர்களின் படங்களில் இவர்கள் பக்தியை சொன்ன விதம் வேறு.
இவர்களின் எந்த விதமான வாடையும் இன்றி ஒரு வித்யாசமான பக்திபடம் தமிழில் வந்தது. கிராபிக்ஸில் அம்மன் வருவது, மாயாஜால காட்சிகள் வருவது இப்படி எதுவும் இல்லாமல் கடவுள் வருவதை வித்யாசமா சொல்லி இருந்தது இப்படம்.
இப்படத்தை இயக்கியவர் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா எஸ்.வி ரமணன் அவர்கள். இப்படத்தின் கதைப்படி, கடவுளை நீ ஆழமாக நம்பினால் அவர் எந்த வடிவத்திலும் வந்து உன்னை காப்பாற்றுவார் என சொல்லி இருந்தார் இயக்குனர். மனிதர்கள் ஆழமாக நேசிக்கும் ஒன்று சினிமா,மற்றும் சினிமா நட்சத்திரங்கள். பல்வேறுவிதமான துன்பங்களில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தமான ஹீரோ வடிவிலேயே கடவுள் வந்து உதவி செய்வதும், இந்த உலகில் எதெல்லாம் யதார்த்தம் என புரிய வைப்பதும் தான் கதை.
ஒய்.ஜி மகேந்திரன் நாயகனா , சுகாசினி நாயகியா நடித்திருந்த இப்படத்தில் கடவுளாக ரஜினி, சிவாஜி, ஜெய்சங்கர், கமல், சிவாஜி என பலர் நடித்திருந்தனர்.க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி வடிவத்தில் வந்து சாட்சி சொல்லும் கடவுளாக சிவாஜிகணேசன் நடித்திருந்தார்
1983ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த இந்த படம் ஓரளவு பேசப்பட்ட படம். படத்துக்கு இசையமைத்தவரும் அனிருத்தின் தாத்தாவான இயக்குனர் எஸ்.வி ரமணனே.

