மற்றவர் இசையமைத்த பாடலை இளையராஜா பாடல் என்று சொல்வது நியாயமா

மற்றவர் இசையமைத்த பாடலை இளையராஜா பாடல் என்று சொல்வது நியாயமா

20களின் நடுவே இசைஞானி இளையராஜாவின் ராஜாங்கம் சினிமா உலகில் ஆரம்பமானது. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா கொஞ்சம் கொஞ்சமாக தனது விஸ்வரூபத்தை எடுக்க தொடங்கினார். எண்பதுகளின் மத்தியில் எல்லாம் அவர் பிஸியான நாட்கள் தான் அதிகம். அவ்வளவு புகழ்பெற்ற இசைய ராஜாவின் பாடல்கள் எல்லாம் இன்றும் போற்றி புகழத் தக்க பாடல்களாய் விளங்குகின்றன.

 

ஆனால் இளையராஜாவின் பல பாடல்களை தவிர்த்து அவர் எண்பதுகளில் பிரபலமாக இருந்த காரணத்தினால் மட்டும் அந்த நேரத்தில் இசையமைத்த மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களையும் இளையராஜாவின் லிஸ்டிலேயே வைத்துவிட்டனர். உதாரணமாய் சங்கர் கணேஷ் இசை அமைத்த இதயத் தாமரை படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும். அதற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்கள் என்றாலும் அதில் சங்கர் கணேஷ்  வாடை அதிகம் இருக்காது  வித்தியாசமாக அருமையாக மாடனாக இசையமைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே பாடல்களை ரொம்பவும் அருமையாக வழக்கமான பாணியில் இருந்து விலகி  கொடுத்திருந்தார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டானாலும் ஏனோ இன்றும் பலர் அதை இளையராஜா இசை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல வேதம் புதிது படத்தின் பாடல்களும் மிக அருமையாக இருக்கும். அதில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் உட்பட பல பாடல்களை இன்னும் இளையராஜா இசை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் பஸ் ஸ்டாண்டுகளில் mp3 கேசட்டுகள் விற்பார்கள்  இளையராஜா ஹிட்ஸ் என்று இதுபோல மற்றவர்கள் இசையமைத்த  பாடல்களை எல்லாம் உள்ளே கோர்த்து விட்டிருப்பார்கள். இதுபோல தேவா இசை அமைத்த புருஷ லட்சணம் படத்தில் வரும் செம்பட்டு பூவே என்ற பாடல் எல்லாம் கேட்கும் போது இது இளையராஜா இசை தான் என்று அடித்து சொன்னவர்களை எல்லாம் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.