கிங்காங்கிடம் தொலைபேசியில் பேசிய ரஜினி

கிங்காங்கிடம் தொலைபேசியில் பேசிய ரஜினி

ரஜினி நடித்த அதிசய பிறவி உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர், நகைச்சுவை நடிகர் கிங்காங். இவர் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் வாங்கிய விருது ஒன்றை ரஜினிகாந்திடம் காண்பித்து ஆசிர்வாதம் வாங்க விரும்புவதாகவும் அது நடக்கவில்லை எனவும் கூறி இருந்தார்.

இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் மொபைலில் அவரை தொடர்பு கொண்டு, கண்ணா குவாரண்டைன் எல்லாம் முடியட்டும் நானே ஒரு டைம் சொல்றேன் பார்க்கலாம் என அவருக்கு ஆறுதலும் வாழ்த்தும் கூறினார்.

இது சம்பந்தமான ஆடியோவை கிங்காங்கே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.