---Advertisement---

தமிழக முழு ஊரடங்கு- நடிகர் சித்தார்த் கருத்து

Published on: May 8, 2021
---Advertisement---

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதால்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு இட்டுள்ளார்.

இரண்டு வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளார்.

இது குறித்து சித்தார்த் கருத்து கூறும்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்று  நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இழந்து வருகிறோம். மருத்துவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. நம் ஒன்றாக இந்த பெரும் தொற்றை சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.