ப்ரணம் கரீடு படத்தின் மூலம் கடந்த 19878ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர். இதனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இவருக்கு ஆந்திர மக்கள் அளித்தனர்.
எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் இன்று வரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிதான். தெலுங்கில்மாரண ம்ருதங்கம், கேங் லீடர், கொண்டவெட்டி தொங்கா, ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன் என எண்ணிலடங்கா சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, தமிழிலும்
மாப்பிள்ளை, ராணுவ வீரன் உள்ளிட்ட படங்களில் நேரடியாக நடித்துள்ளார். அவர் நடித்துள்ள தெலுங்கு படங்கள் டப் செய்யப்பட்டு தமிழில் காதல் தேவதை உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆக ஓடி உள்ளன.
ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தில் ஒரு காட்சிக்கு வந்தாலும் நச்சென்று நறுக்கென்று வருவார். அதுபோல ரஜினி நடித்த ராணுவ வீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இவர்.
காங்கிரஸ் கட்சியில் எம்.பியாக இருந்த இவர் பின்பு பிரஜா ராஜ்யம் கட்சியை துவங்கினார்.
இன்று பிறந்த நாள் காணும் சிரஞ்சீவி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.









