தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவதை ஒட்டி அந்த பதவிக்கு நடிகர் சந்திரசேகரை முதல்வர் நியமனம் செய்துள்ளார்.
நிழல்கள், சம்சாரம் அது மின்சாரம், எச்சில் இரவுகள், மாஞ்சா வேலு, முதல் வசந்தம் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சந்திரசேகர்.
இவர் திமுக கட்சிக்காக அதிகம் உழைத்தவர்.
கடந்த ஐந்து மாதங்கள் முன்பு வரை வேளச்சேரி திமுக எம்.எல்.ஏ ஆக இருந்தவர் இவர்.
இந்நிலையில் இயல் இசை நாடக மன்றத்தலைவராக நியமிக்கப்பட்ட நடிகர் சந்திரசேகர் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.









