---Advertisement---

ப்ளூ சட்டை மாறனின் புது அவதாரம்

Published on: March 21, 2022
---Advertisement---

சமீபத்தில் ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததும் அதற்கு பின்பு அஜீத்தை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததும் அஜீத் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அஜீத்தின் முரட்டு ரசிகரான நடிகர் ஆர்.கே சுரேசும் நீ என்னடா வெண்ண தலய விமர்சனம் பண்றது என மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனை வாரினார்.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனை விமர்சனம் செய்த ஆர்.கே சுரேஷ் போன்றவர்கள் துரத்துவது போல பரியேறும் பெருமாள் படத்தின் காட்சியை வைத்து யாரோ ஒருவர் மீம் கிரியேட் செய்ய அதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விளக்கமும் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த விளக்கம் இதுதான்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை அழுத்தமாக சொன்ன மிகச்சிறந்த படம் பரியேறும் பெருமாள். அதில் நாயகனின் தந்தையாக நடித்து நெகிழச்செய்த மண்ணின் கலைஞர் தங்கராஜ் ஐயாவின் முகமாக.. இந்த ஆதிக்க கேலியில் இருப்பது பெருமை. வடிவமைத்த தம்பிக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.