---Advertisement---

முக்கியப் பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் –அடுத்தது என்ன ?

By Sri
Published on: March 14, 2020
---Advertisement---

உலகின் நம்பர் 1 பணக்காரராக 24 ஆண்டுகள் இருந்த பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடந்த 1975 ஆம் ஆண்டு தனது நண்பர் பவுல் ஜிஆலனோடு இணைந்து தொடங்கினார் பில்கேட்ஸ். இதன் பங்குகளை வைத்திருந்தது மூலம் பில்கேட்ஸ் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். அதன் பின் அமேசான் உரிமையாளர் வசம் அந்த தகுதியை இழந்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் அதன் பின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் இருந்து தனது தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார்.  அதன் பின்னர் இயக்குனர்கள் குழுவிலும் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியில் மட்டும் இருந்து வந்தார்.இந்நிலையில் திடீர் முடிவாக இயக்குனர்கள் குழுவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

அடுத்ததாக  மூன்றாம் உலக நாடுகளில் மருத்துவ சேவை, ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்த போவதாக அறிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.