---Advertisement---

பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான் – உறுதி செய்த விஜய் டிவி

By Sri
Published on: September 20, 2019
---Advertisement---

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலிவுட்டுக்கும் தாவியது. பிக்பாஸ் தமிழ் முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அது மாபெரும் வெற்றி அடையவே 2 மற்றும் 3வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 3 நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4ஐ யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் சரத்குமார், சூர்யா, மாதவன், சிம்பு என பலரின் பேரும் அடிபட்டது.

இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அடுத்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த சீசனுக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  SK-RKFI Update: "65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!" சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.