தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி முத்து. எல்லோரும் டிக் டாக் செய்வதை கேலியாக கிண்டலாக பேசி வரும் நிலையில் டிக் டாக் செயலி மூலமாக செத்த பயலுவளா நாரப்பயலுவளா என்று பேசியே பிரபலமானவர் ஜி.பி முத்து.
நிறைய இணைய யூ டியூப் சேனல்கள் இவரை வளர்த்து விட்டதால் அடுத்தடுத்து பிரபலமாகி கொண்டே வருகிறார்.
டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து தனக்கு வரும் கடிதங்களை காமெடியாக படித்து அந்த சேனலையும் புகழ்பெற்ற சேனலாக்கி விட்டார்.
சினிமா வாய்ப்புகள் குவிந்து வரும் ஜி.பி முத்து தற்போது சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படத்தில் நடிக்கிறார்.
முன்னேற்றத்தின் பாதையில் மிக வேகமாக சென்று வரும் ஜி.பி முத்து அளவற்ற உயரங்களை தொட இருக்கிறார் என்பதன் முன்னோடியாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகிறது.
இந்த புகைப்படம் அதற்கு ஆதாரமாக செய்திகளில் உலா வருகிறது.
Oru Vela Irukumo! 😅#GPMuthu #BiggBoss #BigBoss pic.twitter.com/SiEXz4xbd5
— Behindwoods (@behindwoods) September 3, 2021







