---Advertisement---

பீஸ்ட் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி

Published on: March 11, 2022
---Advertisement---

பீஸ்ட்’ புகைப்படங்கள் லீக் ஆகியிருப்பது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

அங்கிருந்து படத்தின் 2 புகைப்படங்கள் லீக்காகி இருப்பதாகத் தெரிகிறது. இதில் வெளிநாட்டில் மிருகங்களுக்கு இடையே விஜய் நிற்பது போன்று ஒரு புகைப்படம், தீவிரவாதி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் விஜய்யுடன் இருப்பது போன்று ஒரு புகைப்படம் ஆகியவை வெளியாகியுள்ளன.

இந்தப் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது, படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தாண்டி இதுவரை எந்தவொரு புகைப்படமும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதனால் எப்படி புகைப்படங்கள் வெளியானது என்ற விசாரணையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!

Star couple Suriya and Jyothika celebrating their 20th wedding anniversary.

20 ஆண்டுகால காதலை கொண்டாடிய சூர்யா – ஜோதிகா: மீண்டும் மோதிரம் மாற்றி புது vows செய்த நட்சத்திர ஜோடி!

Official teaser poster for Vijay Sethupathi's period action drama Baththa.

“விஜய்சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியீடு: மிரட்டலான ரெட்ரோ அவதாரத்தில் மக்கள் செல்வன்!

Conceptual graphic representing the Hollywood remake announcement of Vijay Sethupathi's Maharaja.

விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்: ஆஸ்கார் நாயகன் மேத்யூ மெக்கானகி நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!