---Advertisement---

பெங்களூரு அருகே விமான விபத்து தவிர்ப்பு- பயணிகள் உயிர் பிழைத்த அதிசயம்

Published on: January 20, 2022
---Advertisement---

பெங்களூருவில் நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட‌து. இதனால் அதில் பயணித்த 426 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 7-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ஒரு இண்டிகோ விமானம் வடக்கு ஓடுதளத்திலும், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்லும் இன்னொரு இண்டிகோ விமானம் தெற்கு ஓடுதளத்திலும் பறக்க தயாராக இருந்தன. இந்த இரு விமானங்களிலும் பணியாளர்கள் 12 பேருடன் சேர்த்து 426 பேர் இருந்தனர்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் ஒரு விமானத்துக்கு வடக்கு ஓடுதளத்திலும், இன்னொரு விமானத்துக்கு தெற்கு ஓடுதளத்திலும் புறப்பட ஒரே நேரத்தில் சமிக்ஞை வழங்கினர். இதையடுத்து இரு விமானங்களும் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து ஒன்றை ஒன்று நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த‌ விமான நிலைய ரேடார் குழு அதிகாரிகள், 2 விமானங்களின் பைலட்டுகளுக்கும் அவசர தகவல் கொடுத்தனர். இதனால் நேருக்கு நேராக மோத இருந்த கொல்கத்தா விமானம் இடது பக்கமும், புவனேஸ்வர் விமானம் வலது பக்கமும் திரும்பின‌. இதனால் நடுவானில் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஓடுதள செயல்பாடுகளுக்கான பொறுப்பாளர் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் வடக்கு ஓடுபாதையை பயன்படுத்த முடிவு செய்ததே இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தெற்கு ஓடுதளம் மூடப்பட்டது குறித்து தெற்கு கோபுர கட்டுப்பாட்டாளருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே தெற்கு கோபுர கட்டுப்பாட்டாளர் கொல்கத்தா செல்லும் விமானத்தை புறப்பட அனுமதித்துள்ளார்.

இதை அறியாமல் புவனேஸ்வர் செல்லும் விமானம் புறப்பட வடக்கு கோபுர கட்டுப்பாட்டாளரும் அனுமதி அளித்தார். தெற்கு மற்றும் வடக்கு கோபுர கட்டுப்பாட்டாளர்களின் சமிக்ஞை ஒருங்கிணைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிவில் ஏவியேசன்டிஜி அருண்குமார் கூறும்போது, ”விசாரணை நடை‍பெற்றுவருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க‌ப்படும்” என்றார்.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official cast announcement promotional graphic featuring actor Jeevan in Lover Boy.

‘லவர் பாய்’ படத்தில் இணைந்த நடிகர் ஜீவன்: ஆக்‌ஷன் களத்திற்குத் திரும்பும் ஒரிஜினல் லவர் பாய்!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Fans celebrating the 1700-day theatrical milestone of Vinnaithaandi Varuvaayaa at PVR VR Mall Chennai.

சென்னை மாலில் சாதனை படைக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’: 1700 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் சிலிர்ப்பூட்டும் சாதனை!

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!