---Advertisement---

ஓட்டுநரின் அலட்சியம் உயிரிழந்த குழந்தை

Published on: November 23, 2020
---Advertisement---

சென்னை தாம்பரம் அருகேயுள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் கூலித்தொழிலாளியான இவர் பெருங்களத்தூரில் உள்ள மதுரகவியாழ்வார் தெருவை சேர்ந்தவர் ஆவார்.

இவரது மகன் சிவலிங்கம் 3வயது குழந்தையான இந்த குழந்தை தனது தந்தையுடன் பைக்கில் ஏறி நின்றுள்ளார் அப்போது அந்த வழியே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி ஒன்று லேசாக பைக்கில் தட்டி விட்டு சென்றது.இதில் கீழே விழுந்த பைக் மீது லாரி மோதிவிட்டு சென்றது.

இதில் காயமடைந்த சிறுவன் சிவலிங்கத்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.விபத்து ஏற்படுத்திய பெருங்களத்தூர் அன்பு நகர் பகுதியை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.