எப்போதும் இருக்கும் கூட்டம் இந்த வருடம் ஐயப்பன் கோவிலில் இல்லை. காரணம் கொரோனா காலத்தை மனதில் வைத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை. ஆன்லைன் பதிவு, பதிவு செய்தாலும் கிடைக்காத நிலை, கொரோனா சர்ட்டிபிகேட்டை காண்பிக்க வேண்டிய நிலையால் பலர் ஐயப்பன் கோவில் இந்த வருடம் செல்லவில்லை
இருப்பினும் பல பக்தர்கள் அய்யப்பன் கோவில் செல்ல முடியவில்லையே என வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களின் வருத்தத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஐயப்பன் கோவில் பிரசாதம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரவணை பாயாசம், விபூதி, மஞ்சள், நெய், குங்குமம் போன்றவை அவரவர் வீடுகளுக்கே தபாலில் அனுப்பபடுகின்றன.
இதற்காக தமிழ்நாடு அளவில் 47 தபால் நிலையங்களில் புக்கிங் துவங்கியுள்ளது ரூ 450 பணம் செலுத்தி புக் செய்து கொண்டால் ஐயப்பன் கோவில் பிரசாதம் வீடு தேடி வந்து விடும்.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் இருக்கும் தலைமை தபால் நிலையத்தில் கண்டிப்பாக புக் செய்யலாம் என தெரிகிறது.












