---Advertisement---

பா.ஜ.க வளர்ச்சிக்கு உதவும் விஜய்…அண்ணாமலை அட்டாக்…

Published on: July 4, 2024
Annamalai Vijay
---Advertisement---

நடிகரும், தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவ – மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பரிசும் வழங்கினார். அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணின் அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டார்.

இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை விஜயின் மீது திருப்பியுள்ளது. விஜய் ஒன்றிய அரசு என பேசியது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்திருந்தார் பா.ஜ.க.தமிழக தலைவர் அண்ணாமலை.

விஜய் பேசியது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்திருப்பது போல இருக்கிறது என்றார்.

Vijay
Vijay

நீட் தேர்வு குறித்து விஜய் பேசியதற்கும் அண்ணாமலை பதிலளித்தார். கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வான தமிழகத்திலிருந்து மாணவ – மாணவியரைபற்றிய புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலே அதிலிருந்து பதில் கிடைத்து விடும் என்றார். அதே போல பா.ஜ.க. தமிழகத்தில் தனித்துவமாக வளர்ந்து வருகிறது.

ஒன்றிய அரசு என விஜய் திமுக சொல்வது போல சொல்லியிருப்பது தமிழக பா.ஜ.க.விற்கு நல்லது தான் என்றார். இரண்டாயிரத்து இருபதுக்கு முன்னர் வரை யாரும் மத்திய அரசு குறித்து பேசும் போது ஒன்றிய அரசு என குறிப்பிட்டது கிடையாது. ஆனால் அப்படி அழைப்பதை பழக்கமாக்கிக்கொண்டுள்ளனர் என்றார்.

பா.ஜ.கவை எதிர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நீட் தேர்வு குறித்து பேசப்படுகிறது. பா.ஜ.காவை எதிர்க்கும் நோக்கில் இருந்து வரும் விஷயங்கள் எல்லாம் பா.ஜ.க.வை வளர்ச்சி பாதையை நோக்கியே கொண்டு செல்லும் என சொல்லியிருந்தார் அண்ணாமலை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the exciting new film starring Varun Tej and produced by Karthik Subbaraj.

வருண் தேஜ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி: புதிய படத்தில் இணையும் மாஸ் காம்போ – இசையமைக்கும் சாய் அபியங்கர்!

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!