ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சில ஆண்டுகள் முன் வெளிவந்த திரைப்படம் அந்தாதூன். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கி தனது மகன் பிரசாந்துக்காக இந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் இயக்கியுள்ளார்.
பிரசாந்த், கார்த்திக், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்கள் முன் தான் முடிந்தது அதற்குள் அனைத்து பணிகளையும் வெகுவேகமாக முடித்து டப்பிங் பணிகளை எல்லாம் சீக்கிரம் முடித்து ரிலீசுக்கும் தயாராகி விட்டது.
தயாரான அந்தகன் படத்தை இயக்குனர் தியாகராஜனுடன் நடிகை சிம்ரன் பார்த்து ரசித்தார். தியாகராஜன் போன்ற சூப்பர் நோவா இயக்குனருடன் அந்தகன் படத்தை பார்த்து ரசித்தது நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார் சிம்ரன்.









