தனது ஆண்டாள் அழகர் கல்லூரியை கொரோனாவுக்கு அவசர மருத்துவமனையாக பயன்படுத்த கடந்த வருடமே விஜயகாந்த் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகம் உயிரிழப்புகள் இருப்பதால், மீண்டும் இந்த வருடமும் அத்தகைய அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளேன்.
மேலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது, கொரோனா நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு, இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.







