---Advertisement---

காதல் மனைவி முக்கியமல்ல…அதிர்ச்சி கொடுத்த அஜீத்!…

Published on: July 2, 2024
Ajith Shalini
---Advertisement---

அஜீத் தற்போது இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது “விடாமுயற்சி” படத்தின் வேலைகள். படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. எப்போதும் போல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து சேர்ந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வேற லெவல் எஞ்சாய்மென்டிற்கு சென்று விட்டனர் அஜீத் ஃபேன்ஸ்.

“குட் பேட் அக்லி” படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்தது அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் வேகமாக நடந்து வருகிறது. அங்கே நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார் அஜீத். இந்த மாதத் துவக்கத்தில் சொந்த வேலைகளுக்காக அஜீத் சென்னை வரயிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி இல்லாமல் அஜீத் தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டிலே தான் இருக்கிறார்.

“அமர்க்களம்” படத்தில்  நடித்து வந்த போது அஜீத் – ஷாலினி இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் மணமுடித்து கனவன் – மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்வீக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Shalini Ajith
Shalini Ajith

இந்நிலையில் அஜீத்தின் காதல் மனைவியான ஷாலினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. ஆபரேஷன் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் படி அறுவை சிகீட்சை நடத்தப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அழகான ஆத்மா அஜித்... புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி....

பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி கிடப்பில் போடப்பட்டிருந்த “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் ஷாலினியின் ஆப்பரேஷனின் போது அஜீத் உடனிருக்க முடியாமல் போகிவிட்டது. அஜர்பைஜானிலிருந்த படியே ஷாலினியின் உடல் நிலையை பற்றி விசாரித்து வந்து கொண்டிருக்கிறாராம் அஜீத்.

தனது காதல் மனைவி உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் கூட படப்பிடிப்பு தான் முக்கியம். படப்பிடிப்பு தடை பட்டால் அது பலரையும் பாதித்து விடும் என்ற நல்ல எண்ணத்தினாலேயே அஜீத் சென்னைக்கு வரவில்லை.

தனது மனைவியை அருகில் இருந்து கவணிக்கவில்லை என்றாலும்  அஜீத்தின் இந்த தொழில் பக்தியை வளர்ந்து வரும் இன்றைய இளம் நடிகர்கள் பார்த்து அவரை போலவே சினிமாவின் மீது அக்கறை காட்ட வேன்டும் என பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?