---Advertisement---

சோனமுத்தா போச்சா?…அடுத்த ரவுண்டு இங்கதானா இனி?…ஐ ஆம் வைட்டிங்னு சொன்ன வடிவேலு!…

Published on: April 29, 2024
vadivelu
---Advertisement---

 

‘மீம்ஸ்’களில்  மட்டுமே பார்க்க முடியுது, என்ன செய்றது என ஏங்கித்தவித்து கொண்டிருந்தனர் வடிவேலுவின் ரசிகர்கள். தமிழ் சினிமா கண்டெடுத்த காமெடியன்களில் இவர்தான் சிறந்தவர் என சொல்லும், அளவில் அடேங்கப்பா எத்தனை ஹிட்டுகள் தான்.

அடம் பிடித்து அழும் குழந்தைகளுக்கு வடிவேலுவின் படத்தை காட்டினாலே அவர்கள் சாந்தமாகி சகஜமாக மாறி விடுவார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் அன்பை பெற்று விருப்ப கலைஞனாக வலம் வந்தார் “வைகைப்புயல்” வடிவேலு.

“மாமன்னன்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கிடைக்க, ஆஹா அடுத்த ரவுண்டு நிச்சயம் இருக்கு , காமெடியில கலக்கிவிடலாம் என காத்திருந்தார் வடிவேலு. ஆனால் அவரிடம் வந்து கதை சொன்னவர்கள் எல்லாம் குணச்சித்திர வேடங்களை மட்டுமே பிரதானபடுத்தி சொன்னதை கேட்டு  ‘சோன முத்தா போச்சா’ என அவரது காமெடி டயலாகை அவரையே மீண்டும்  சொல்ல வைத்துவிட்டது விதி.

vadivelu
vadivelu

இப்படி எத்தனை நாள் தான் சும்மா இருக்குறதுன்னு சிந்திச்ச வடிவேலு இப்ப ஒரு புது ரூட்ல களமிறங்கப்போறாராம். ஆனா அது வெள்ளித்திரையில் கிடையாதாம், சின்னத்திரையிலாம். இவரும் மெகா சீரியல்ல நடிக்கப்போறாரான்னு அதிர்ச்சி அடைய கூடாது ரசிகர்கள். அப்படி என்ன திட்டம் தான் போட்டுருக்கிறார் வடிவேலு என சொல்லியுள்ளார் “வலைப்பேச்சு’அந்தணன்.

என்னடா இது ஒரு டைப்பா இருக்கே என நினைப்பது போலத்தான் பிரபல தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை நடத்தப்போகிறாராம். சம்பள பேச்சு வார்த்தை மட்டும் தான் பேச வேண்டிய பாக்கி. மீது உள்ள அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு விட்டது என்ற தகவலையும் சேர்த்து சொல்லியுள்ளார் அந்தணன். காமெடியில கலக்கியவர் இனி கையில் கரண்டியோடு கலக்க காத்திருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!