---Advertisement---

அந்த நடிகர் வீட்டில் பாரின் பொன்னு இருக்கே… கொரோனா பரவி இருக்குமா ? – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீரெட்டி !

By Sri
Published on: March 23, 2020
---Advertisement---

தெலுங்கு முன்னணி நடிகரான பவன் கல்யாணை வம்பிழுக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பலர் தன்னை பாலியல் ரீதியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டதாக அரைநிர்வாணப் போராட்டம் செய்து பரபரப்புகளைக் கிளப்பியவர் தெலுங்கு துணை நடிகர் ஸ்ரீரெட்டி. அது மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ், முருகதாஸ் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அதன்பின் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

இதையடுத்து சென்னையில் தங்கி கொண்டு சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையானப் புகைப்படங்களை வெளியிடுவதும், இரட்டை அர்த்த கருத்துகளை தெரிவிப்பதுமாக ஜாலியாக இருந்து வருகிறார்.

இப்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் விதமாக ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் ‘ பவன், தன்னுடைய வீட்டில் வெளிநாட்டு பெண் ஒருவரை வைத்து இருக்கிறார். அவருக்குக் கொரோனா பரவி இருக்குமா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான அண்ணா லெஸ்நெவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவரைக் குறிப்பிட்டுதான் ஸ்ரீரெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.