---Advertisement---

Rambha & Prabhu Deva Reunion : ஊர்வசி.. ஊர்வசி.. ரம்பா காட்டிய அந்த சர்ப்ரைஸ்! பிரபுதேவாவின் மனைவி மற்றும் மகளைப் பார்த்துள்ளீர்களா? வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்!

By Sri
Published on: March 30, 2026
Actress Rambha with Prabhu Deva, his wife Himani Singh, and their daughter in a recent viral photo.
---Advertisement---

தமிழ் சினிமாவின் 90-களின் ஃபேவரிட் ஜோடிகளில் ஒன்றான பிரபுதேவா மற்றும் ரம்பா நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இந்தத் திடீர் சந்திப்பு குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி ஹிமானி சிங் மற்றும் அவர்களது குட்டி மகளையும் ரம்பா இந்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

Actress Rambha with Prabhu Deva, his wife Himani Singh, and their daughter in a recent viral photo.

பிரபுதேவா கடந்த 2020-ஆம் ஆண்டு டாக்டர் ஹிமானி சிங் என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரபுதேவா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பவர். அவ்வப்போது சில பொது நிகழ்ச்சிகளில் மட்டும் அவரது மனைவி தலைகாட்டுவது வழக்கம். ஆனால், இப்போது ரம்பா தனது குடும்பத்துடன் பிரபுதேவாவின் வீட்டிற்கே சென்று இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார்.

இந்த அழகான சந்திப்பு குறித்து ரம்பா கூறுகையில், “எனது இனிய நண்பர் பிரபு மாஸ்டர் மற்றும் ஹிமானியுடன் ஒரு அருமையான சந்திப்பு” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் பிரபுதேவாவின் மனைவி ஹிமானி மற்றும் அவர்களது அழகான பெண் குழந்தையும் இடம்பெற்றுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘காதலன்’ மற்றும் ‘விஐபி’ பட நாயகன் மற்றும் நாயகி ஒன்றாக இணைந்திருப்பதைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rambha💕 (@rambhaindran_)

பிரபுதேவா தற்போது கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்டு வரத் தயாராகி வருகிறார். அவர் நடிப்பில் பல படங்கள் ரிலீஸிற்குத் தயாராக உள்ள நிலையில், அவரது குடும்ப புகைப்படங்கள் வெளியானது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாகப் பிரபுதேவாவின் மகள் அப்படியே அவரைப் போலவே ஜேராக்ஸ் எடுத்தது போல் இருப்பதாக ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ரம்பா பகிர்ந்த இந்த போஸ்ட் இப்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!