---Advertisement---

அவரு தானே பரவாயில்ல. விட்டுரலாம்..லேட்டா அட்டெண்டன்ஸ் போட்ட அஞ்சலி…

Published on: May 31, 2024
---Advertisement---

“அங்காடி தெரு” படத்தில் மூலம் அதிகமானோரால் அறியப்பட்ட நாயகியானார் அஞ்சலி. “எங்கேயும் எப்போதும்” படத்தில் ஜெய்க்கு ஜோடி போட்டு நடித்தார். “கலகலப்பு” படத்தில் விமலுக்கு  இணையானார். குறுகிய காலத்திலேயே வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைத்து வந்தார் இவர்.

திடீரென தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். ஜெய்க்கும் இவருக்கும் இடையே காதல், இருவரும் லிவ்விங்- டூகெதராக வாழ்ந்து வந்தனர் என செய்திகள் கசிந்தது. தெலுங்கு சினிமாவில் திடீரென நடிக்கத்துவங்கினார் அஞ்சலி.

ஷங்கர் இயக்கி வரும் “கேம் சேஞ்சர்” படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி” பட நிகழ்ச்சியில் முன்னனி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

balakrishna anjali
balakrishna anjali

திடீரென பாலகிருஷ்ணா அஞ்சலியை மேடையில் தள்ளி விட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அதை பார்த்து. அவர் தள்ளி விட்ட  வீடியோதான் இப்போது வைரல்.

ஆனால் அஞ்சலியோ என்ன இருந்தாலும் அவர் டோலிவுட்டின் முக்கிய நடிகர் அல்லவா என்பதால் சிரித்த படியே சமாளித்துவிட்டார்.  ஆனாலும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெட்டிசங்கள் எண்ணெய் இல்லாமலே வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்களான நிலையில் இது குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நல்ல பரஸ்பரம் உண்டு.

பாலகிருஷ்ணாவுடன் வெகு நாட்களுக்கு பிறகு மேடையை பகிர்ந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியளித்தது என சொல்லியுள்ளார். அஞ்சலி லேட் என்ட்ரி கொடுத்திருந்த போதும் நெட்டிசன்கள் தங்களது வேலையை பார்த்துக்கொண்டுதான் வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'காதல் தேசம்' திரைப்படத்தின் 30 ஆண்டு நிறைவுச் சிறப்புச் செய்தி.

காதல் மற்றும் நட்பின் காவியம் ‘காதல் தேசம்’: வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு – ஏ.ஆர். ரஹ்மானின் மாயாஜால இசையில் உருவான படத்தின் சுவாரஸ்யங்கள்!

Director Samuthirakani talking about the making of the movie Nadodigal.

‘நாடோடிகள்’ பட வாய்ப்பை முதலில் நிராகரித்த பிரபலங்கள்: இயக்குநர் சமுத்திரகனி பகிர்ந்த சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் தகவல்கள்!

News graphic featuring a potential box office clash between Dhanush and Rajinikanth.

தனுஷ் vs ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் மோதல்!: ஒரே வாரம் வெளியாகும் ‘ஓம்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ – கோலிவுட்டில் வெடிக்கும் சூப்பர் ஸ்டார் சண்டை!

TVK President Thalapathy Vijay regarding upcoming election updates.

விஜய்யிடம் சீட் கேட்ட பிரபல சினிமா தயாரிப்பாளர்: தளபதி சொன்ன அதிரடி பதில் – தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் பரபரப்பு தகவல்!

Late veteran actress Sowcar Janaki.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்த மூத்த நடிகையின் மறைவால் திரையுலகம் அதிர்ச்சி!

Actor Kamal Haasan traveling in economy class.

உண்மையான லெஜண்ட்! ஆடம்பரத்தைத் தவிர்த்து எகானமி கிளாஸில் பயணம் செய்த கமல்ஹாசன்: திரையுலகிற்கு முன்னோடியாக மாறிய உலகநாயகன்!