---Advertisement---

செல்பி எடுக்க சுத்து போட்ட ரசிகர்கள்… செம கூலாக போட்டோ எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா…!

By Sri
Published on: September 10, 2024
---Advertisement---

சூர்யாவை பார்த்தவுடன் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க குவிந்த நிலையில் அவர்களுடன் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா தற்போது சினிமாவில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் இவருடன் சேர்ந்து ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

இதைத் தொடர்ந்து ஊட்டியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யாவை அவரின் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் சூர்யாவுடன் செல்பி எடுப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு இளைஞர்கள் முந்தியடித்தனர். அப்போது அவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் மலையாளத்தில் சிறப்பாக ஓடிய ஆர் டி எக்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான நஹாஸ் சூர்யாவை சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கின்றார். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு வர உள்ளது. நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.