பிரபல நடிகர் பாண்டு காலமானார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான பாண்டு பல தமிழ் படங்களில் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலருடன் இணைந்து காமெடி செய்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான இவர் சிறந்த ஓவியர் ஆவார். தமிழ்நாடு டூரிசம் டிபார்ட்மெண்ட் லோகோவை வடிவமைத்தவர் இவரேயாவார்.
கரையெல்லாம் செண்பகப்பூ, அழகி, ஏழையின் சிரிப்பில், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
நல்ல திறமைசாலி நடிகரான பாண்டு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்.
எண்பதுகளில் பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் இவரது சகோதரர் ஆவார்.







