---Advertisement---

திடீர் உடல் நலக்குறைவு… மலையாள நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி…!

By Sri
Published on: August 18, 2024
---Advertisement---

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

மலையாளத்திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மூச்சு திணறல், தீவிர காய்ச்சல் மற்றும் தசை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகி இருக்கின்றது.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் 5 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது. அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைப்படி மோகன்லாலுக்கு வைரஸ்வாச தொற்று இருப்பதாக சந்தேகக்கப்படுகின்றது.

மேலும் லூசிபர் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகின்றது. இந்த படத்திற்கு l 2 எம்புரான் என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் மோகன் லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்கு திரும்பி இருக்கின்றார். அப்போது உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.