---Advertisement---

நாலு வார்த்தை நச்சின்னு பேசிய டெல்லி கணேஷ்…மறுக்க முடியாமல் நின்ற கமல்ஹாசன்…

Published on: April 16, 2024
kamaldelhiganesh
---Advertisement---

குணச்சித்திர நடிகராகவே தனது  திரைவாழ்வை துவங்கி இன்று வரை அதை சிறப்பாக செய்து வருபவர் டெல்லி கணேஷ்.

கதாநாயகர்கள் கூடவே வரும் கதாபாத்திரமாக அல்லது அவர்களுக்கு இணையான வேடங்களை ஏற்றும் அதில் நகைச்சுவையும் கலந்து  நடித்தவர் டெல்லி கணேஷ். கமல்ஹாசனின் அதிக படங்களில் நடித்திருப்பார்.

கமல்ஹாசனின் படம் என்றால் அதில் ஒரு சில நடிகர்கள் எப்பொழுதுமே இடம் பெறுவர். அது கமலுடைய கூட்டணி என்றே சொல்லலாம். அதில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் இவர்.

“அவ்வை சண்முகி” படத்தில் ஜெமினி கணேசனின் மேலாளராக வரும் டெல்லி கணேஷ் நகைச்சுவையில் அசத்தியிருப்பார். இவரின் சினிமா வரலாற்றில்  சிறப்பு சேர்த்த ஒரு படம் என்று சொன்னால்  அது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “நாயகன்”.

வேலுநாயக்கராக கமல்ஹாசன், அவருடனே படம் முழுவதும் வரும்  ஐயர் கதாபத்திரமாக டெல்லி கணேஷ். போலீசிடம் அடி வாங்கி மருத்துவமனையில் அனுமதி பெற்று, அங்கு வைத்து நடக்கும் ஒரு காட்சியின் வசனத்தில் பாலகுமாரன் எழுதிக் கொடுத்ததோடு இவர் சிலவற்றையும் சேர்த்துக்கொண்டாராம்.

delhi ganesh
delhi ganesh

“அடிச்சு கேட்டாங்க உங்கள பத்தி நாயக்கரே, நான் ஒண்ணுமே சொல்லலையே, எனக்கு எங்கயிருந்துதான்  தைரியம் வந்துச்சுன்னு தெரியல” அதோடு அந்த வசனம் முடிந்து போகுமாம்.

“நீங்க நல்லா இருக்கனும் நாயக்கரே, நா செத்துட்டு போறேன் உங்களுக்காக செத்தா அது பெருமை தான்”னு  சொல்லி முடித்தாராம் டெல்லி கணேஷ்.

‘ஸ்கிரிப்டில்’ இல்லாத போதும் கமல்ஹாசன் அந்த நேரத்துக்கு ஏற்ற வசனம் என்பதோடு அதை பற்றி எதுவும் சொல்லாமல் தனது மகிழ்ச்சியை மட்டும் கமல்  வெளிப்படுத்தவே, படத்தில் இணைக்கப்பட்டதாம். தியேட்டரில் இந்த காட்சி வரும் போது  ரசிகர்களிடமிருந்து வந்த  கைத்தட்டல் சத்தம் காதுகளை கிழித்ததாம் அந்த நாட்களில்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!