---Advertisement---

இல்ல இல்ல நான் தான் ஃபர்ஸ்டு…வெற்றி மாலை சூட்டிய ஆதி?…

Published on: June 1, 2024
pt sir
---Advertisement---

 

ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள “பி.டி.சார்” படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசிரி கணேசனுக்கு மலர் மாலை அணிவிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

அமைதியான பையன் ஆதி தியாகராஜனின் பள்ளிக்கூடத்தில் பி.டி.வாத்தியாராக சேருகிறார். மாணவ மாணவியரின் அன்பை பெற்ற ஆசிரியராக மாறுகிறார். இப்படி கலகலப்பாக துவங்குகிறது படம். அதன் பிறகே மிகப்பெரிய திருப்பத்தை நோக்கி செல்கிறது ஆதியின் வாழ்க்கை படத்தில்.

மாணவி அனிகாவிற்கு நேர்ந்த கொடுமையை கண்டு பொங்கி எழுகிறார் ஹீரோ. இது தான் படத்தின் கதை. படத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி பாராட்டுக்களை பெற்றிருந்தார். கார்த்திக் வேணுகோபால் படத்தை இயக்கியிருந்தார்.

பெண் அடிமைத்தனம், பெண்களுக்கு  எதிரான கொடுமைகளுக்கு முற்று புள்ளி வைக்க சொல்லும் விதமான கதைக்கருவை கொண்டு வெளிவந்திருந்தது பி.டி.சார் படம். அந்த வகையில் இயக்குனர் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

aathi
aathi

சில காலமாக சினிமாவை சற்றே விலகியிருந்த ஆதி பி.டி.சார் படத்தின் மூலம் தனது கேரியரை வலுப்படுத்தியுள்ளார். 2கே கிட்ஸ்ன் அபிமான நடிகர்களில் ஒருவரான் ஆதி படத்தில் குறைகள் இருந்தாலும் தனது நடிப்பால் அவற்றை எல்லாம் மறக்கடிக்கச்செய்திருந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காதலுக்கு கேட் போட்ட சரத்குமார்!...நாட்டாமை மட்டும் தீர்ப்ப மாத்தி சொல்லியிருந்தா வரலட்சுமியோட வாழ்க்கை?...

படத்தின் வசூல் நினைத்தது போலவே இருந்தது என சொல்லவைக்கும் விதமாக படத்தின் நாயகன் ஆதியும், இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலும் தயாரிப்பாளர் வேல்ஸ் இன்டர் நேஷனல் ஐசிரி கணேசனை சந்தித்து மலர் மாலை அணிவித்து படத்தினுடைய வெற்றிக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், கணேசனின் ஆசிகளையும் பெற்றுள்ளனர். இவர்கள் சந்திப்பு குறித்த புகைப்படம் வைரலாகி  வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional banner of the Tamil-Telugu multi-starrer movie Dharman featuring Rajinikanth and Ram Pothineni.

ரஜினியுடன் இணையும் வைப் ஹீரோ ராம் பொத்தினேனி! அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dialogue writer Dravid Selvam smiling during an interactive media session about the movie Scene.

சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!

Official first look poster of the Tamil comedy film LoveBite featuring Santhanam and Aparna Das.

சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil fantasy comedy film Maragadha Naanayam 2.

மீண்டும் களமிறங்கும் சூப்பர் ஹிட் பேண்டஸி கூட்டணி! வெளியான ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக்!

Promotional still of actor Dhanush and co-stars from the movie OM.

அண்டர்கவர் ஏஜெண்டாக தனுஷ், போலீஸாக சாய் பல்லவி! வெளியானது ‘OM’ படத்தின் அதிரடி கதைக்களம்!

Promotional poster of the Tamil movie Ameera featuring Seeman and RK Suresh.

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சாட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!