சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது துறை சார்ந்த ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட்ஸ், அரசு சார்பில், கொடுப்பதற்காக சில இடங்களில் கமிஷன் ரீதியாக பேசினார் என்று பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையால் குற்றம் சாட்டப்பட்டார்.
இதை மறுத்து ராஜகண்ணப்பன் கூறிவிட்ட போதிலும், இது போல சர்ச்சைகளை தவிர்க்க தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் ஸ்வீட்ஸையே அரசு துறை சார்ந்த விசயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி தீபாவளி நெருங்குவதையொட்டி அனைத்து துறை அலுவலர்களும் இதையே பயன்படுத்த வேண்டும் என அரசால் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.







