இயக்குனர் பாண்டியராஜனின் இரண்டாவது படமாக வெளிவந்தது ஆண்பாவம் திரைப்படம். இயக்குனர் பாக்யராஜை குருநாதராக கொண்டதாலோ என்னவோ இவரின் படங்கள் ஹோம்லியாகவும் அதே நேரத்தில் நகைச்சுவை சரவெடிகளுடன் கொண்ட காட்சியமைப்பிலும் இவரின் படங்கள் வேற லெவலில் இருக்கும்.
இவரின் ஆண்பாவம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம்.இன்றைய இளசுகளாலும் கொண்டாடப்படும் படம். பாண்டியன்,பாண்டியராஜன், கொல்லங்குடி கருப்பாயி, வி.கே ராமசாமி என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு மிகவும் கலகலப்பாக இப்படத்தை இயக்கி இருந்தார் பாண்டியராஜன்.
சீதா, ரேவதி கதாநாயகிகளாக நடித்தனர். குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் மிகப்பெரும் பலம்,அதை விட பின்னணி இசை மிகப்பெரும் பலம் என்றே சொல்லலாம். படத்தில் அடிக்கடி வரும் ஒரு ஃப்ளூட் பின்னணி இசை இன்றளவும் பலரை கவர்ந்துள்ளது.
பாண்டியராஜனுக்கு பெரிய சாதனை சரித்திரம் படைத்த இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகிறது.







