---Advertisement---

புதிதாக படம் தயாரிப்பவர்களுக்கு ஏவிஎம் சரவணன் கூறும் அட்வைஸ்

Published on: October 15, 2020
---Advertisement---

ஏவிஎம் நிறுவனம் பொன்விழா கண்ட நிறுவனம் அந்தக்கால களத்தூர் கண்ணம்மா முதல் சிவாஜி வரை தங்களது நிறுவனமான ஏவிஎம் புரொடக்சன்ஸ் மூலம் தயாரித்து பெயர் பெற்றது இந்த நிறுவனம்.

தன் தந்தை மெய்யப்ப செட்டியாரையே அனைத்திற்கும் உதாரணமாக கூறும் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்ன அந்த ஏவிஎம் மூன்றேழுத்துதான் எல்லாம் என தன் தந்தை  சொன்னதை பாலபாடமாக ஏற்று இவ்வளவு வருடங்கள் சீரிய முறையில் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது இவரது மகன் எம்.எஸ் குகன் தான் நிர்வாகத்தை கவனித்து வருகிறாராம்.

தனக்கு சரியாக பணம் கூட எண்ண வராது என எளிமையாக பேசும் சரவணன் எங்கள் நிறுவனத்தின் படங்களில் கதை விவாதங்களில் மட்டுமே நான் அந்தக்காலங்களில் இருந்து அதிகம் பங்கேற்பேன் என கூறியுள்ளார். பணம் யாரும் கொடுத்தாலும் கூட அலுவலர்களிடம் கொடுத்து எவ்வளவு பணம் என கவுண்ட் பண்ணி சொல்லுங்க என்று சொல்வாராம்.

அந்தக்காலங்களில் படம் தயாரித்த முறை வேறு. இப்போது நிறைய கார்ப்பரேட் கம்பெனிகள் பெருகிவிட்டது இது மிகப்பெரிய ஆபத்தை சினிமா துறைக்கு தரும் என சரவணன் கூறியுள்ளார். புதிதாக படம் தயாரிப்பவர்கள் நிதானமாகத்தான் தயாரிக்க வேண்டும் தன் தந்தை உதாரணமாக ஒரு விசயம் சொல்வாராம்  ஒருவன் படம் ரிலீஸ் ஆகலையேன்னு மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரிலீஸ் செய்ய முயற்சி செய்யலாம் தவறில்லை. ஆனால் படம் எடுப்பதற்கே மனைவியின் நகைகளை வைக்க கூடாது என தெளிவாக ஒரு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!