தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து பாசில் இயக்கிய வருஷம் 16 படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அந்தக்காலத்தில் பெரும் வரவேற்பு பெற்றார். அதற்கு பிறகு வந்த சின்னத்தம்பி திரைப்படம் குஷ்புவை உச்சாணி கொம்பில் ஏற்றி விட்டது என கூறலாம்.
இந்த படம் வந்த பிறகு குஷ்புவுக்கு கோவில் எல்லாம் கட்டினார்கள் ரசிகர்கள். தங்கள் வீட்டில் ஒரு பெண் போல குஷ்புவை பலர் ஒரு காலத்தில் பாவித்தார்கள்.
ஒரு கட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பதவிகளை வகித்த குஷ்பு, இப்போது சற்று அரசியலில் அதிக ஆர்வம் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார் அசைக்க முடியாத பல ரசிகர்கள் இன்றும் குஷ்புவுக்கு உண்டு. இணையதளங்களில் குஷ்புவுக்கு ஃபேன் பேஜ் ஆரம்பித்து கலக்கி கொண்டிருக்கிறார்கள் பல ரசிகர்கள்.
இன்று குஷ்புவின் பிறந்த நாளையொட்டி குஷ்புவுக்கு வாழ்த்துக்கள் சமூக வலைதளங்களில் பறக்கின்றன.
ராதிகா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் பலரும் குஷ்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.







