---Advertisement---

கங்கனா மீது கர்நாடக மாநிலம் தும்கூரில் வழக்கு

Published on: September 28, 2020
---Advertisement---

நடிகை கங்கனா ரணாவத், தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் நடித்த இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். பாரதிய ஜனதா ஆதரவாளரான இவர் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக மஹாராஷ்டிரா  ஆளும் சிவசேனா அரசை விமர்சித்து வருகிறார்.

இதனால் சிவசேனா கட்சியினர் இவருக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிர அரசை தொடர்ந்து எதிர்த்து வரும் இவரின் பங்களாவின் மேற்புறம் ஒன்று சட்டத்துக்கு மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் இடித்தனர்.

இந்நிலையில் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மசோதாவை தொடர்ந்து ஆதரித்து பேசி வரும் நிலையில்

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளை கங்கனா தனது டிவிட்டர் பதிவில் அவமதித்ததாக கூறப்படுகிறது. அதில், ‘உண்மையில் தூங்கினால் விழித்துக்கொள்ளலாம். ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. வேளாண் மசோதா குறித்து அறியாதவர்கள் பாசாங்கு செய்கின்றனர்’ என்று, விவசாயிகளை அவமதித்து கடந்த 21ம் தேதி சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க கோரி, கர்நாடகா மாநிலம் தும்கூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்,  கங்கனா ரனவத் பதிவுகளை வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!