தற்கொலை என்பது எதற்குமே தீர்வு தரும் விசயமே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் மாணவ மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்கின்றனர்.
படிக்க முடியவில்லை பாஸ் செய்ய முடியவில்லை என்ற காரணம்தான் அது. படிப்பை விடுத்து பார்த்தால் நமக்குள் ஒளிந்திருக்கும் தனித்திறமைகள் ஆயிரம் உண்டு . ஏதோ வாழ்க்கையில் பிழைக்கவும் ஆயிரம் வழிகள் உண்டு.
லட்சியம் நிறைவேறாத நபர்கள் வாழ்க்கையில் எத்தனையோ பேர் உண்டு. அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் ஜெயிக்கிறார்கள் எல்லாரின் லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமும் ஆனால் அப்படி நிறைவேறவில்லையென்றால் அதற்காக மாற்று வழியில் முயற்சி செய்து தனது தனித்திறமைகளால் முன்னேற வேண்டும் தற்கொலை செய்வது கோழைத்தனம் ஆகும்.
இதை சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்சிகள் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் நீட் மற்றும் கொரோனா தற்கொலைகளை எதிர்த்து ஒரு நபர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் உலாவருகிறது.
நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலா அந்த நபரை சரியாக சொன்னாய் என பாராட்டியுள்ளார்.
https://twitter.com/manobalam/status/1305531146608889856?s=20







