---Advertisement---

அறிக்கை விட்ட சூர்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ள காயத்ரி ரகுராம்

Published on: September 14, 2020
---Advertisement---

சூர்யா நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார் சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் இறந்து போயினர்.

இதற்கு சூர்யா கடுமையாக தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறிக்கிறது என கடுமையான வார்த்தைகளில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தடை செய்யப்பட வேண்டும் எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு நடிகையும் பாரதிய ஜனதாவின் தமிழக பண்பாடு மற்றும் கலைத்துறை சேர்மனுமாகிய காயத்ரி ரகுராம் , சூர்யாவின் அறிக்கைக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிகர்களுக்கு பேனர் வைப்பவர்கள் இறந்து போகிறார்கள், இதற்கு பணம் செலவழிப்பதன் மூலம் எத்தனை ரசிகர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள், இதற்காக திரைப்படங்களை தடை செய்யலாமா இதற்கு வாதம் செய்ய மாட்டீர்களா என காயத்ரி ரகுராம் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1305331659840000002?s=20

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.