---Advertisement---

குட்டீஸ், சுட்டீஸ் விரும்பும் நடிகர் வடிவேல் பிறந்த தினம் இன்று

Published on: September 12, 2020
---Advertisement---

நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் இன்று. 1991ல் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் நல்லா இருக்கியலாண்னே என கவுண்டமணியிடம் கேட்டு அண்ட்ராயருடன் இருக்கும் கவுண்டமணியிடம் தாறுமாறாக அடிவாங்கும் காட்சியில் அறிமுகமானர் வடிவேலு.

vadivelu

 

மதுரை பகுதியை சேர்ந்த பல கலைஞர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஜாம்பவான்களாக உள்ளனர். இதற்கு இளையராஜா, பாரதிராஜா, விஜயகாந்த் போன்றோரை கூறலாம். அந்த வரிசையில் காமெடிக்கென வடிவேல்தான் அவர் இல்லையேல் காமெடியும் இல்லை மீம்ஸ்சும் இல்லை என தற்கால குழந்தைகளும், இளைஞர்களும் இருக்கின்றனர்.

தினமும் சமூக வலைதளங்களை ஆக்ரமித்திருப்பது வடிவேல்தான். வடிவேலு செய்த எல்லா சேட்டைகளையும் தொகுத்து ஏதாவது ஒன்றை தினம் தோறும் நெட்டிசன்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

கார்ட்டூன் கதாபாத்திரம் போல பல நிகழ்வுகளிலும் வடிவேலுவின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் முகநூலில் ஒரு நண்பர் விளையாட்டாய் டிரெண்ட் ஆக்கிய நேசமணி காமெடி ப்ரண்ட்ஸ் திரைப்படம் வந்து 18 வருடங்களுக்கு பின் மிகப்பெரும் டிரெண்ட் ஆனது. இது போல மேஜிக் எல்லாம் வடிவேலால்தான் நிகழ்த்த முடியும்.

வடிவேலுவின் ஆரம்ப கால நகைச்சுவை மிக அட்டகாசமாய் இருக்கும், பாஞ்சாலங்குறிச்சி, சுந்தரபுருஷன், செல்லக்கண்ணு, பசும்போன், கிழக்கு சீமையிலே, அரண்மனைக்கிளி, சக்தி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடி மிக பிரமாதமாய் இருக்கும். நடிக்க வந்த புதிது என்பதால் மிக ஒல்லியான தேகத்துடன் பார்த்த உடன்  சிரிப்பு வரும் வகையில் இருப்பார் வடிவேலு.

சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே நடிகர் கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து இவர் நடிக்க வாய்ப்பு பெற்ற ஒரு விசயமே போதும் வடிவேலுவின் திறமைக்கு இதுவே மிகப்பெரும் சான்று.

சிங்காரவேலன் படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார். ஆரம்ப காலத்திலேயே வந்த சிங்காரவேலன் படத்தில் கலக்கி இருப்பார் குணச்சித்திர வேடத்தில் தேவர் மகன் படத்தில் கையை இழந்த இசக்கியாக கலக்கி இருப்பார்.

பாடுவதிலும் வல்லவரான வடிவேலு , இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் சொந்த குரலில் பாடியுள்ளார்.

இன்று பிறந்த நாள் காணும் வடிவேலுவுக்கு வாழ்த்துக்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!