டி 20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கு பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே பதிலளித்துள்ளார்
மற்ற நாடுகளைப் போல இல்லாமல் இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கோலிதான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மாவை டி 20 அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் எனக் கருத்துகள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘இந்திய அணிக்கு கோஹ்லி, ரோகித் என இருவரையும் கேப்டனாக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோலியை பொறுத்தவரை கேப்டனாக வேண்டும் என்றே, இவர் பிறந்துள்ளார் போல உள்ளது. ரோஹித் மும்பை அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கோஹ்லி இல்லாத போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு ஒரு கேப்டன் மட்டும் இருக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.







