---Advertisement---

ராணுவ வீரர்களுக்கு கொரோனா… ஏடிஎம் மூலம் பரவல்! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

By Sri
Published on: April 25, 2020
---Advertisement---

குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக 24000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குணமானவர்கள் 4400 பேருக்கு மேல் இருக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பரோடா பகுதியில் மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பத்து தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருந்த 28 சக ராணுவ வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மூவரும் ஒரே ஏடிஎம் இயந்திரந்தில் பணம் எடுக்க சென்றது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ஏடிஎம் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மில் கடந்த சில நாட்களில் பணம் எடுக்க வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.