---Advertisement---

டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க இதுதான் வழி ! முன்னாள் வீரர் சூப்பர் ஐடியா!

By Sri
Published on: April 22, 2020
---Advertisement---

ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை என்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசு கொரொனா வைரஸை தடுக்கும் விதமாக இன்னும் 6 மாதத்துக்கு வெளிநாட்டவர் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டி 20 உலகக்கோப்பைத் தொடர் தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் ‘அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் இந்தியாவில் நடத்திக் கொண்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவில் நடத்திக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Raghava Lawrence and producer Lokesh Kanagaraj Benz movie LCU connection poster with Kaithi and Leo references.

லோகேஷ் கனகராஜின் எல்சியு அதிரடி… கைதி மற்றும் லியோ படங்களுடன் இணையும் புதிய மெகா பட்ஜெட் படம்!

Actor Dhanush and director Vasanthabalan throwback picture discussing scripts at a cinema event.

அங்காடி தெரு கதையைக் கேட்டு தனுஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை; பல வருடங்களுக்குப் பின் வெளியான அதிரடி உண்மை

Hollywood actress Emma Myers from Wednesday series praising Indian blockbuster movies Baahubali and 3 Idiots in a viral interview.

பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!

Mega Power Star Ram Charan and Janhvi Kapoor attending Peddi movie Chennai press meet live promotional event.

சிங்கார சென்னைக்கு வரும் டாப் மாஸ் ஹீரோ… ஜூன் 4ல் தியேட்டர்களை அதிரவைக்க வரும் மெகா பட்ஜெட் படம்!

Director RJ Balaji sharing details about Aamir Khan message to actor Suriya and Silambarasan TR phone call praising Karuppu movie success.

சூர்யாவுக்கு வந்த மெசேஜ்… தியேட்டரை அதிரவிட்ட பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய டாப் ஹீரோ!

Sun Pictures celebrating 10 million plus Spotify streams milestone poster for the viral hit track Raga Of Revenge.

ஸ்பாட்டிஃபையில் 10 மில்லியன் ஸ்ட்ரீம்கள் கடந்து சாதனை படைத்த சன் பிக்சர்ஸின் மாஸ் ட்ராக்