நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தாராளபிரபு படத்தைப் பாராட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பேசியுள்ளார்.
பாலிவுட்டில் ஹிட்டடித்த விக்கி டோனர் படத்தை தமிழில் தாராளபிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த மாதம் வெளியிட்டனர். தியேட்டர்களில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இப்போது அமேசான் ப்ரைம் மூலம் இந்த படத்துக்கு புதிய கவனம் கிடைத்துள்ளது. ஊரடங்கில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருப்பதால் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த மனோ பாலா கூறியதாவது, “நான் தாராள பிரபு படத்தை அமேசான் ப்ரைமில் பார்த்தேன் .. மிகவும் ஆபத்தான ஒரு ஸ்கிரிப்டை அருமையாக கையாண்டிருக்கின்றனர். விவேக் சார் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு அற்புதமாக இருந்தது.” என பாராட்டியுள்ளார். இதுபோல பல ரசிகர்களும் இந்த படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.







