---Advertisement---

மோசமாகும் இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை – ஐ சி யூ வில் அனுமதி!

By Sri
Published on: April 7, 2020
---Advertisement---

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிவிட்டரில் அறிவித்த அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வேலைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்பதால் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

மருத்துவமனையில் அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த செய்தியானது அந்த நாட்டு மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. கொரோனாவால் இதுவரை இங்கிலாந்தில் 51000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic highlighting that actor Madhavan was the initial choice for the blockbuster film Irumbuthirai.

விஷாாலுக்கு முன் இரும்புத்திரை நாயகனாக இருந்தது இவரா: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்ட செம சீக்ரெட் தகவல்!

Conceptual graphic representing actor Legend Saravanan's upcoming project with director Thirukumaran.

லெஜண்ட் சரவணனின் அடுத்த புதிய படம்: இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் களமிறங்கும் மாஸ் கூட்டணி – முழு விவரம்!

Actor Soori speaking about how he handles online criticism and trolls.

கதைக்கும், விமர்சனங்களுக்கும் சூரி கொடுத்த மாஸ் பதிலடி: “எப்படியாவது குறை கண்டுபிடிக்க காத்திருக்காங்க!” – வைரலாகும் பேச்சு!

Conceptual graphic representing the exciting new film starring Varun Tej and produced by Karthik Subbaraj.

வருண் தேஜ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி: புதிய படத்தில் இணையும் மாஸ் காம்போ – இசையமைக்கும் சாய் அபியங்கர்!

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!