தொலைக்காட்சி முதல் சமூகவலைத்தளங்கள் வரை கொரோனா குறித்த இரண்டே வாசகங்கள் கூறப்படுகின்றது. ஒன்று சமூகவிலகல் மற்றொன்று சுய தனிமைப்படுத்தல். இதுவே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழியாகும். இதனையே இந்திய அரசும் பின்பற்றுமாறு மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது.
அந்த வகையில் பிரபலங்களும் மக்களுக்கு தங்கள் சமூக ஊடகங்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். இதனை சற்று வித்தியாசமாக 96 படத்தின் நாயகி தெரிவித்துள்ளார்.
96 படத்தின் நாயகியான குட்டி ஜானு, கௌரி ஜி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் 96 படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சிறுவயது ராமும்-ஜானுவும் சமூக விலகலை கருத்தில் கொண்டு விலகி நின்று உள்ளார்கள். நீங்களும் சமூக விலைகளை ராம்மையும்-ஜானுவையும் பார்த்து கத்துக்கோங்க. அப்போதான் கொரோனா பிடியில் இருந்து தப்ப முடியும் என்று சூசகமாக கொரோனா குறித்த தன்னால் முடிந்த விழிப்புணர்வை ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ளார்.
At the time of this Corona scare, be like Ram and Janu. 😆#KeepDistance #stayprotected pic.twitter.com/phoCx7Ardr
— Gouri G Kishan (@Gourayy) March 31, 2020







