---Advertisement---

இந்து மதத்தைப் பார்த்து சிரித்தவர்கள் இப்போது சிந்திக்கிறார்கள்… முன்னணி நடிகை கருத்து !

By Sri
Published on: March 20, 2020
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை பிரனிதா கொரோனா வைரஸ் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடுதலின் மூலம் பரவலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர் பலரும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதே போல கைகுலுக்குவதையும் தவிர்த்து இந்திய முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.

இது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ள நிலையில் தமிழ் நடிகையான பிரணிதா ‘இந்து மக்கள் கையெடுத்து வணங்கி வணக்கம் தெரிவித்ததைப் பார்த்து சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் கைகளையும், கால்களையும் கழுவுவதைப் பார்த்து சிரித்தார்கள். அதேப்போல விலங்குகளையும், மரங்களையும், காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். இந்துக்களின் சைவ உணவுப்பழக்கம், யோகா ஆகியவற்றைப் பார்த்தும் சிரித்தார்கள். உயிரிழந்தவர்களை புதைக்காமல் எரிப்பதை பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு குளிப்பதை பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. அதற்குப் பதிலாக சிந்திக்கிறார்கள். இந்த பழக்கம் தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது. இது மதம் இல்லை. வாழ்க்கையின் வழி.’ என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதிக்கான கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது! சென்னை மாநகராட்சி!!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.