---Advertisement---

சமந்தாவுக்கு ஜோடியாகும் டாப் ஸ்டார் – இயக்குனர் யார் தெரியுமா ?

By Sri
Published on: March 14, 2020
---Advertisement---

நடிகை சமந்தா ஜானு படத்தின் தோல்வியை அடுத்து ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நடிகை சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலிஸான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த தோல்வியில் இருந்து மீள உடனடியாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இதையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும், கேம் ஓவர் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தாதூன் என்ற படம் உருவாகவுள்ள நிலையில் இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.