---Advertisement---

2021 –ல் நாந்தான் முதல்வரா இருப்பேன்னு நினைக்கிறேன் – வடிவேலு தடாலடி!

By Sri
Published on: March 13, 2020
---Advertisement---

நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று அளித்த பேட்டியில் 2021-ல் தான் முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ரசிகர்களிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக தனது அரசியல் வருகைப்பற்றி பேசினார். அதில் தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசையில்லை என்றும் தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் என்றும் கூறியது விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதுபற்றி பலரும் பலவிதமாகப் பேசிவரும் நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தன் பாணியில் இதற்கு பதிலளித்துள்ளார். நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வடிவேலு செய்தியாளர்களிடம் ‘ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை .அவர் சொல்வது கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை நான் வரவேற்கிறேன். என் கணக்குப்படி பார்த்தால் 2021-ல் நான்தான் முதல்வர்.’ என தடாலடியாகப் பேசியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.