---Advertisement---

சுருளி கம்மிங் சூன் – டிவிட் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த தனுஷ் !

By Sri
Published on: March 10, 2020
---Advertisement---

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் சுருளி திரைப்படம் மிகவிரைவில் ரிலிஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது அவர் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற படம் ரிலிஸூக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் தஞுஷ் சுருளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து படம் மே 1 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ’அவன் சீக்கிரம் வருகிறான்’ என ஒரு டிவிட்டைப் போட்டுள்ளார். இதன் மூலம் மே 1 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சந்தோஷ் நாராயனன் இசையமைத்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.