---Advertisement---

கோலியை விட இவரது ஆட்டம் என்னை ஈர்த்துள்ளது – லாராவின் மனம் கவர்ந்த வீரர் யார் ?

By Sri
Published on: March 10, 2020
---Advertisement---

இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகி வரும் கே எல் ராகுலின் ஆட்டத்திறன் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற லெஜண்ட் வீரர்கள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா இந்தியா வந்துள்ளார். போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவரிடம் இந்திய வீரர்களில் உங்கள் மனம் கவர்ந்த வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார் என்றாலும் எனக்கு கே எல் ராகுல் பேட்டிங்க்தான் பிடித்துள்ளது. அவரது ஆட்டத்தைதான் நான் விரும்பி பார்த்து வருகிறேன். அவர் சிறந்த பொழுதுபோக்கு பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார். அவர் ஏன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

அவருக்கு எல்லாவகையான போட்டிகளிலும் விளையாடும் திறன் உள்ளது. எந்தவடிவிலான ஒரு இந்திய அணியாக இருந்தாலும் கோலிக்கு அடுத்த பெயராக ராகுல் இருக்க வேண்டும்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.