விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி இஸ் கம்மிங் என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 15 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலிஸ் விழா மார்ச் 15 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்னதாகவே வாத்தி இஸ் கம்மிங் என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவரை மாணவர்கள் கேலி செய்யும் விதமாக இந்த பாடல் இருக்கும் எனத் தெரிகிறது.









