இந்தியத் திரையுலகில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பால் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட சாதனை படைத்த பக்தி மற்றும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’ (Hanuman Ansh). தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் இந்தியா (Netflix India) வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருகிற நவம்பர் 29-ஆம் தேதி முதல் ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் குஜராத்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் ஹிந்தி பதிப்பு நவம்பர் 27-ஆம் தேதி சோனி லைவ் (SonyLIV) தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து பிராந்திய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
View this post on Instagram
இயக்குநர் டாக்டர் விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படம், மகாராஜ் ஜி எனப் போற்றப்படும் நீம் கரோலி பாபாவின் (Neem Karoli Baba) வாழ்க்கை மற்றும் ஆன்மீகப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்த பிறகு கடவுள், வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பதில்களைத் தேடிப் புறப்படும் லட்சுமிநாராயணன் என்ற இளைஞன், எவ்வாறு நீம் கரோலி பாபாவாக மாறினார் என்பதையும், அன்பு மற்றும் தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவத்தையும் இப்படம் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது.
ஷோபினவ் சத்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சந்தன் கே. ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் ரஸ்தோகி, விஹான் ஷெட்ஜ் மற்றும் நிகில் துபே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் நவம்பர் 29 முதல் நெட்ஃபிளிக்ஸில் தமிழில் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.













